Archive

Posts Tagged ‘tamil’

ஆண்டு விழா

October 9, 2016 4 comments

பள்ளி பருவத்தில் நாடகங்கள் சில நடித்திருக்கிறேன். சுற்றி உள்ள பிற பள்ளிகளில் ரோமியோ ஜூலியட்களும், ஷேக்ஸ்பியரின் மற்ற கதாபாத்திரங்களும் கை கோர்த்து காதல் வசனம் பேசி வந்த வேளையில்; எங்கள் பள்ளியில் முருகர்கள் உலகத்தை சுற்றி வருவதும், கட்டபொம்மன்கள் தூக்கிலிடப்படுவதும் வருடாந்திர நிகழ்வாக இருந்தது. அப்போ கொஞ்சம் வயித்தெரிச்சலா தான் இருந்தது, ஆனா இப்போ நெனச்சா பெருமையா இருக்கு. நான் பதினோராம் வகுப்பு படிக்கையில் நடந்த ஆண்டு விழாவில் ‘விபீஷண சரணாகதி‘ எனும் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஆங்கில வசனம் வேற. அன்று பாடம் முடிந்ததும் என்னை அழைத்து “5 மணிக்கு நியூ ட்ராமா ப்ராக்டீஸ். 7ஏ கிளாஸ்ரூம்க்கு வந்துடு” என்றார் என் ஆங்கில டீச்சர் . “என்ன ரோல் மேம் எனக்கு ? ” என்று கேட்டதற்கு ஒன்றும் கூறாமல் சிரித்து விட்டு சென்றார் .

நாடகம், அதற்கு ஒத்திகை, ஆண்டு விழாக்காலம் என்றாலே ஒரே ஜாலி தான். இதை சாக்காக வைத்து பல வகுப்புகளை கட் அடித்து விட்டு போகலாம். அதே குஷியுடன் 5 மணிக்கு போனேன் . பல தெரிந்த முகங்கள் மத்தியில் அவளும் இருந்தாள் . “நம்ம பேட்ச் தான்டா வேஸ்ட். நம்ம சீனியர் செட்டும் சூப்பர், ஜுனியர் பொண்ணுங்கள பத்தி கேக்கவே வேணாம், யார பாக்கறது யார விடறது தெரியல” என்ற உலக வழக்கு என் பேட்ச்சுக்கும் பொருந்தும். ஆயினும் இந்த சமன்பாட்டில் சேராத ஓரிரு பெண்களில் அவளும் ஒருத்தி. நாடகத்தில் நமக்கு ஜோடி கதாபாத்திரம் அவளுக்கு கொடுத்தா நல்லா இருக்குமேன்னு நெனச்சிக்கிட்டே எங்க இங்கிலிஷ் டீச்சர் கிட்ட போனேன். “உனக்கு தான்டா சென்ட்ரல் ரோல். இருக்கிறதிலேயே நிறைய டயலாக் வேற. ஒழுங்கா பண்ணிடு” என்று சொல்லிக்கொண்டே கையில் சுமார் மூன்று பக்க வசனத்தை கொடுத்தார். பெருமையோடு வாங்கினேன். தலைப்பில் பரிச்சயமான ஒரு பெயர். ஹனுமான்.

அந்த ஒரு நொடியில் மனதில் பல பிம்பங்கள் ரோட்டை கிராஸ் பண்ணி சென்றன. குரங்கு முகத்துடன் நீண்ட வால் வைத்து பள்ளிக்கு முன் ஸ்டேஜில் நிற்பது துவங்கி, ‘ஜோடியா கேக்கற ஜோடி‘ன்னு கடவுளே காரி துப்புவது வரை. “சான்ஸே இல்ல மிஸ், வேற ரோல் குடுங்க எனக்கு” என்றேன். “அதான் சொன்னேனே உனக்கு தான் டயலாக் அதிகம்ன்னு” என்றார். “அவளுக்கு என்ன ரோல்?” என்று கேட்டேன் ஏதோ நவீன ராமாயணத்தில் ஆஞ்சநேயருக்கு ஆள் இருக்கற நெனப்புல. “சீதா” என்றார். படார்னு நெஞ்சு வெடிக்கற சத்தம் கண்டிப்பா பிரின்சிபால் ரூம் வரைக்கும் கேட்டிருக்கும். “ராமர மீட் பண்ணியா” என்று ஒரு 12th சீனியரை நோக்கி கை காட்டினார். மனசுக்குள்ள “மேடி… மேடி… ஹோ ஹோ மேடி” பாட்டை போட்டு அவனை ஒரு முறை நன்கு முறைத்தேன்.

ஓரிரு ஒத்திகைகள் முடிந்தபின்தான் தெரிந்தது எனக்கும் அவளுக்கும் இடையில் நிறைய வசனங்கள் உள்ளனவென்று. ஆனால் வேடிக்கை என்னென்னா அதில் முக்கால்வாசி வசனங்கள் ஆரம்பிப்பது ‘மதர்‘ அல்லது ‘சீதா மாதா‘ வில் தான். நல்லா செஞ்சீங்கடா. இதுல உச்சகட்ட காமெடி சீதையும் ராமரும் நின்று கொண்டு முதல் தளத்திலிருந்து வசனம் பேச, என் மொத்த வசனமும் நான் முட்டி போட்டு பேஸ்மெண்ட்டிலிருந்து தான் பேசிக்கொண்டிருந்தேன். இப்படி முட்டி தேய ஒரு மாதம் ஒத்திகை பார்த்தபின் இறுதியாக ஆண்டு விழா வந்தது. இத்தனை நாள் பள்ளி சீருடையில் ஒத்திகை பார்த்து பார்த்து வேஷம் போடுவதில் உள்ள குல்மா வேலைகள் தெரியாமல் போய்விட்டது.

நான், சுக்கிரீவன் மற்றும் வானர கூட்டங்கள் சென்று வாயில் ஒரு அயிட்டத்தை ஒட்டிக்கொண்டு வந்தோம். எனக்கு ஒரு வால் பொருந்திய பஞ்சகச்சம் தயாராக இருந்தது. அதை மாட்டிக்கொண்டு வரிசையில் நின்னால் எனக்கு பின் அஞ்சு-பத்து அடிக்கு ஒருத்தனும் நிக்க முடியாது. அவ்ளோ நீள வால். இதையெல்லாம் மாட்டிகிட்டு சட்டை எங்கடான்னு தேடிட்டு இருந்தேன். எங்க இங்கிலிஷ் மிஸ் வந்து “ஹனுமான் சட்டெயெல்லாம் போட மாட்டார்டா. அந்த நெக்லஸ்ல்லாம் போட்டுட்டு வா. டைம் ஆச்சு” என்றார். ஏற்கனவே அருமையான கெட்டப், இதுல டாப்லெஸ் வேறயா! முடியவே முடியாதுன்னு ஒற்றை வாலில் நிற்கவே சிம்மாசனத்திற்குப் பின்னிருந்து விசிறும் பெண்களிடமிருந்து எக்ஸ்ட்ரா சில்க் துப்பட்டா ஒன்றை உஷார் செய்து கொடுத்தார். முத்து படத்தில் வர்ற வயசான ரஜினி ஸ்டைலில் அதை உடலில் சுற்றிக்கொண்டு வந்தேன் .

என்னடா நம்ம கோலம் இப்படி அலங்கோலமா இருக்கேன்னு நினைத்துக்கொண்டு வெளியில் வந்தால் விஷ்ணு கதாபாத்திரத்தில் நடிக்கும் நண்பன் எதிரில் வந்தான். உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவிற்கு நீல பெயிண்ட். நம்ம எவ்வளவோ பரவாயில்லை என்று மனசை தேத்திக்கொண்டு மேடை நோக்கி சென்றேன். மண்டோதரி, சீதா உட்பட எல்லா பெண் கதாபாத்திரங்களுக்கும் முழு அலங்காரத்துடன் பட்டுப்புடவை வேற. பாதி டயலாக் அங்கேயே மறந்து போச்சு. நாடகம் துவங்கியது. ஆஞ்சநேயர் வேஷம் போட்டிருக்கோம், மனச அலைபாய விடக்கூடாது என்று சிந்தனையை ஒருமுகப்படுத்துகையில் “சாமி வேஷம்ன்றதுனால ரெண்டு நாள் கவுச்சி கூட தின்னாம இருந்தேன்” ன்னு கமல் சொல்லுவது நினைவுக்கு வந்தது. எப்படியோ நல்லபடியாக பாதி நாடகம் முடிந்தது. அப்போதான் சைத்தான் சைக்கிள்ல வர ஆரம்பித்தது.

அவரவர் காட்சி முடிந்தவுடன் திரைக்குப் பின்னே இருக்கும் ‘பேக் ஸ்டேஜ்‘ க்கு செல்வோம். அடுத்த காட்சி வரும் வரை அங்கிருப்போம். எங்க ஸ்டேஜ், பெஞ்சுகள் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டு அமைத்திருந்ததால் திரைக்குப் பின் பெரிய பள்ளம் இருந்தது. ஒரு காட்சி முடிந்ததும் நான் வேகமாக ஓட, என் வாலினால் பேலன்ஸ் மிஸ் ஆக , வேறு எங்கும் தாங்கிப் பிடிக்க இடமில்லாமல் போக, என் பக்கத்தில் சிம்மாசன விசிறி ஜூனியர் பொண்ணு ஒன்னு நிக்க, கப்புன்னு அனிச்சையா அவள் இடுப்பைப் பிடித்து நான் தாங்கி நிற்க, கேவலமாக ஒரு முறை முறைத்தாள். நல்ல வேல செருப்பு போடல. மீதி நாடகம் முழுவதும் விசிறியை என் மூஞ்சில் விட்டெறியப்போற மாறியே விசிறினாள்.

நாடகம் முடியும் வேளையில் உச்சக்காட்சி நடக்குதம்மா‘ என்ற சீனில் சீதை தான் அணிந்திருக்கும் முத்து மாலையை கழட்டி என்னிடம் குடுப்பாங்களாம். நான் அதில் என் ராமரின் பெயரைத் தேடிக்கொண்டே இருப்பேனாம். அப்படியே திரையை மூடி நாடகம் முடியும். இதுல நம்ம சீதா டுபாகூர் மாலையைத் தராம, அவ போட்டிருந்த ஒரிஜினல் முத்து மாலையைக் கழட்டி கொடுக்க, நானும் நாடகம் முடிஞ்ச குஷியில் எங்கேயோ தூக்கி அடிச்சிட்டேன். ஒரு மணி நேரம் அந்த வாலோட போய் தேடிக் கொடுத்துட்டு வந்தேன். பையன் கண்டிப்பா பசில இருப்பான்னு தெரிஞ்சு என் தாய்க்குலம் நாலஞ்சு சமோசாக்களை முன்னரே வாங்கி பார்சல் செய்து கொடுத்துவெச்சிருந்தாங்க. இரவு பதினோரு மணிக்கு அதை பங்கு போட்டு சாப்பிட்டு நானும் என் நண்பர்களும் சைக்கிளை உருட்டிக்கொண்டு சென்றோம். வாயில் சமோசாவை அடைத்துக்கொண்டே அந்த இடுப்பு மேட்டரை நண்பர்களிடம் சொன்னது இன்றும் நினைவில் உள்ளது!

Advertisements

மடி சாப்பாடு

August 8, 2016 12 comments

சமீபத்தில் நெருங்கிய நண்பன் ஒருவனின் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன். அவன் பெற்றோரின் அறுபதாம் கல்யாணம். தடபுடலாக நடந்த விசேஷத்தில் Highlightஏ சாப்பாடு தான். நானும் எத்தனையோ இடங்களில் சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் இதுபோல ஒரு மாறுபட்ட experience எங்கேயும் இருந்ததில்லை. அவர்கள் பிராமண குடும்பம் என்றதால் மடி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதென்னடா மடின்னு கேக்காதீங்க. பாரம்பரிய வழக்கமாம். கல்யாணம் முடிந்ததும் மளமளவென்று அதே ஹாலில் மக்கள் வரிசையில் கீழே உட்கார துவங்கினர். நானும் என் நண்பன் இன்னொருவனும் ஒரு ஓரத்தில் இடத்தை போட்டோம். ஏதோ அவனுக்கு இந்த சாப்பாடு பத்திய சூட்சுமம்லாம் தெரிந்திருந்ததால் நான் தப்பித்தேன். இல்லேன்னா விவரம் தெரியாம பாதியிலே எழுந்து வந்திருப்பேன்.

இலை போட்டதும் கையில் சிறிது தண்ணீரை ஊற்றிக்கொண்டான் நண்பன். சரி உள்ள தெளிச்சு இலையை கழுவப்போறான்னு பாத்தா, இலைக்கு வெளிய ஒரு மூணு round சுத்தி வாயில உரிந்தான். “பரிசேஷணம் டா” என்றான். Rightu என்றேன். வரிசையாக உணவு பரிமாறுபவர்கள் வருவது தூரத்தில் தெரிந்தது. ஒரே குஷி, செம்ம பசி. சரி மொதல்ல என்ன வைக்கறாங்கன்னு பாத்தா, உப்பு! அடேய் கொல பசில இருக்கேன்டா கூட்டு பொரியல் ஏதாவது வைங்கன்னு மனசுல நினைத்தது யாருக்கோ கேட்டாற்போல சட்டுன்னு ஒரு மூணு பேர் வந்தாங்க. தரையில இருந்து சுமார் 2 அடி உயரத்துல இருந்து பொரியலை கரண்டிகள் இன்றி கைகளால் Airdrop பண்ணாங்க. ஹப்பாடான்னு கை வைக்க போனேன். பட்டுன்னு கையில் தட்டினான் நண்பன். எல்லாம் போட்ட பிறகு தான் ஆரம்பிக்கணும், நடுவுல சாப்பிடாதே என்றான். என் நெலம தெரியாம பேசரடா என்றேன். மொத்த பேரும் கைகோர்த்து ‘ஆமேன்‘ சொல்லிட்டு தான் சோத்துல கை வைக்க விடுவாங்களோ என்று நினைத்துக்கொண்டேன். நானும் ஒரு ஏழெட்டு நிமிடம் இலையை முறைத்துப் பார்க்க, இலை ஏகபோகமாக நிரம்பிக்கொண்டிருந்தது. என் பசி graph, Bell Curve இன் உச்சியை தொட்டு விட்டு பாதாளம் நோக்கி Fast ஆக பாய்ந்துக்கொண்டிருந்தது. இறுதியாக ஏகப்பட்ட சோற்றை தள்ளி அதில் ஒரு குழிக்கரண்டி நெய்யை ஊத்தினாங்க. தோளில் தட்டி “இப்ப சாப்பிடலாம்டா” என்றான் நண்பன். “இன்னும் எதுவும் ஊத்தலையே” என்றேன். நெய் சாதம் தான் Firstu என்றான்.

கொஞ்ச நேரத்துல சாம்பார் வாளி கண்ணுக்கு தென்பட்டது. இதுவாவது இருக்கேன்னு தெம்பாக சாப்பிட துவங்கினேன். சாம்பார்க்கு அப்பறம் ரசம் வரும் ன்னு காத்துக்கிட்டு இருந்த எனக்கு ஒரு surprise காத்துக்கொண்டிருந்தது. சப்பாத்தி மாதிரி ஒரு அயிட்டத்தை frisbee கணக்கில் ஒரு மாமா இலைக்கு இலை வீசிக்கொண்டு வந்தார். என் இலையில விழுந்தப்பொ தான் தெரிந்தது அது சப்பாத்தி இல்லை போளி ன்னு. சாம்பார்க்கு அப்பறம் போளியா, ஏன்டா என் flowவை கெடுக்கறீங்க ன்னு நினைத்துக்கொண்டே போளியை விழுங்க துவங்கினேன். “டேய் டேய் அத சாப்பிட்டியா?” என்று அவசரமாக கேட்டான் நண்பன். அய்யய்யோ அது சாப்பட்ற matter இல்லையா, கை தொடைக்கர்துக்கு குடுத்தாங்களா ன்னு நான் ஒரு நிமிஷம் பீதி ஆயிட்டேன். “நெய் ஒரு roundu வரும் டா, இரு” என்றான். மீதி இருந்த அறை inch போளியை ஆறு கரண்டி நெய்விட்டு அமுக்கியவுடன், காலி இலையில் சுமார் நூறு மில்லி பாலை அனாமத்தாக ஊத்தி விட்டு போனார் ஒருவர். “போலியை அதுல முக்கி சாப்பிட்டிருக்கனும் டா” என்று முறைத்துக்கொண்டே சொன்னான் நண்பன். அட போடா என்றேன். இதுக்கு நடுவில் தான் சுவாரசியமாக ஒரு விஷயம் நடந்தது.

இலைக்கு பத்து ருபாய் கைமாறுவது தெரிந்தது. ஆஹா இது சின்ன கவுண்டர்ல சுகன்யா போடற மொய்விருந்து மேட்டர்ல, நம்ம கிட்ட வேற பத்து பிசா இல்லையே என்று சட்டைப்பையை தடவிக்கொண்டிருந்தேன். அப்பறம் தான் தெரிந்தது எல்லாருக்கும் சாப்பாடும் போட்டு ஆளுக்கு பத்து ரூபாயும் தராங்கன்னு . நண்பனோட அப்பா அம்மா பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் என்று வேண்டிக்கொண்டேன். ரசம் ரவுண்டு முடிந்தவுடன் மோர் சாதம் வர தொடங்கியது. எதிரில் சாப்பிடும் மாமி உள்ளங்கையை மட்டுமில்லாமல் முழங்கையையும் பயன்படுத்தி சாப்பிட்ட காட்சி காணக்கிடைக்காதது. பாயாசத்தை இலையில் இருந்து லாவகமாக சுழட்டி அடிக்க தெரியாத காரணத்தினால் கூச்சப்படாமல் கப்பில் கேட்டு வாங்கி குடித்தேன். அவா அவா சாப்பிட்டவுடன் பக்கத்தில் இருப்பவருக்கு காத்திருக்காமல் கப கபவென்று எழுந்து கை கழுவ சென்றார்கள். அதில் கூட ஒரு புதுமை. எச்சில் கை மற்றவர் மேல் படாமல் இருக்க, அதை கூப்பி சிறிது மேல்நோக்கி வைத்தவாறு கழுவுமிடம் செல்வது வழக்கம். இங்க அனைவரும் எச்சில் கையை கூப்பி தலைக்கு மேலே உயர்த்தி நடந்து செல்வதை பார்த்தபோது , ஜெமினி படத்தில் “எனக்கு தமிழ் பேச தெரியும்” என்று கையை உயர்த்தி நடந்துவரும் கிரண் நினைவுக்கு வந்தார்.

ஒருவழியாக வந்த வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு, நண்பனிடமும் அவன் குடும்பாத்தாரிடமும் விடை பெற்று கிளம்பினோம். எனக்கு இது ஒரு புதுமாதிரி அனுபவமாக இருந்தாலும், பைனாப்பிள் ரசங்களும், பன்னீர் பட்டர் மசாலாக்களும் ஆண்டுக்கொண்டிருக்கும் தற்போதய திருமண உணவு பந்திகள் மத்தியில் மடிசாப்பாடு எப்பவும் ஒரு படி மேல்!

Tamizhum 1190 Markum

May 26, 2015 3 comments

Enna Sir, payyan indha varusham 10th ezhudhi irukkanla?

“Ada aama pa. Exam ezhuthittu avan jolly a thaan irukkan. Enakku thaan vayithula puliya karaikkidhu daily”

“Vidunga Sir. Unga payyanukku enna, nalla mark thaan vaanguvaan. Seri, Engineer a , Doctor a ? 12th la Enna stream la sekka poreenga”

“Avan friends ellam Computer Science thaan edukkaraanga. Ivanum athaan venungaraan”

“Seri adhulaye sethudunga. CS la mark vaangardhu easy nga. Enga akka payyan Biology. 183 yo 4 o thaan eduthaan.  190 kku mela poda maattangalaame”

“Adhuvum Seri thaan”

“French a Sanskrit a ? Sanskrit la llam easy a 200 vaangidlaam. Tamil lla llam 180 e kashtam. Summa adhula pottu waste pannadheenga”

 

Tamilnatla, atleast Chennai la, Pathaavadhula la irunthu Padhinonnavathu pora mukkavaasi maanavargaloda veetla nadakkara saadharna conversation thaan. Computer Science la easy marku, Tamil edutha mark poidum, patthaavadhu varaikkum tamil padichadhe podhungra manappanmai perumabaalana petrorukku irukku (payyanukku enna venum, enna padikkanumnu kekkardhilla, adhu vera vishayam). Kadasiya enna ? Mark vaanganum. Neraya vaanganum. Annan Payyan, Thangachi ponnu, Edhir veettu Ashwin , Pakkathu veettu Priya , ellatha vidayum neraya mark vaanganum. Adhukku kuruku vazhi, tamizh a paadhilaye athu vittu poidradhu.

Odanne “Naanga pudhusssa oru language a katthukkarom” “Our kids will know a new language” nnu kodi pudichittu vandhudaatheenga. Pudhu mozhi kathukkardhula thappilla. Infact evlo mozhi kathukkaromo ulagathula athana kalaacharatha pathi therinjikkalaam. Aana adhukkellam munnadi namma thaai mozhi a muzhusa therinjikkanumla? 11avadhu 12aavadhu la padichaa thaan tamizha, naanga veetla daily pesarome, enga payyan 10aavadhu varaikkum tamil thaan padichaane nnu nenaikkaravanga, avan periyavan aana apparam indha mudivu avana epdi baadhikkidhundradha yosichu paarunga.

11aavathula tamil a venaamnu sonnadhaala adhoda importance avlo thaan nra maari oru thappana abipraayam appove avan manasula form aaiduthu. Idhu poga tamil padicha “naattupuram” , French padicha royal aristocrat nra range la avana ethividradhu veetla. Apdiye padichu periyavan aagi , Paris la conference pogum bothu 11avathula padicha french a vechi ottiduvaaraam. Adhe Bonjour um Bon appétit thaane. Ellarukkum theriyum. Idhellam vida aangila mogam nammala enga vittuchu. Naan padicha school llam “Speak to me in English” nnu badge pottirunthom ellarum. Tamil la pesinaale punishment. Natural a school a english pesaravan, veetla poyum atha thaan pesaraan. So tamil la avanoda total vocabularye adhoda close aaiduthu. Pudhu Pudhu vaarthaigala enga kathuppaan ?

College mudichittu velaikku sendhu naalu peroda pesum bothu ‘maame’, ‘machi’ nnu kaalaaikkardhellam saralama varudhu. Konjam complex vaarthai engayaathu ketta artham therila. Naan onnum Sallaabam, Mandhagaasam nnu over complex words pathi sollala. Pirai, Madhi, Sitrundi, Thanikkai kooda therila. Adha vidunga. Tamil Ezhudha/Padikka ippo irukkara generation la ethana perukku theridhu. Avan kalyaana pathirikkaila irukka tamizhe inga paadhi per padikka theriyaama thaan kalyaanam pannikkaraanunga. Munnadi tamil paatu variyellam manappadama paadittu irundha gumbal ippo rendu line kku mela poradhilla. Yenna Thaamarai, Karky nnu kavinjargal neraya peru pudhu pudhu tamil vaarthaigala paatukkalla marubadiyum kondu varanumnu muyarchi pannittu varaanga. Namma payyan andha maari ‘complicated’ tamil llam therinjikku virumba maatraan.

Theatre la padam paakkum bothu, dialogue la chinna kavidhai vandha kooda, pakkathula irukkanavana artham kekkaraan. ‘Oru vaarthai Oru latcham’ llam TV la potta sutham. Rendaavadhu round kku mela namma payalukku oru vaarthaikku kooda artham therila. Avan pera avanaalaye tamizh la ezhudha therilainga. America la irunthu enna prayojanam ? Idhellam vida worstu. Avan aalu avanukku tamizhla ezhudhi kudutha love letter a en friend oruthanukku naan padichu kaatnen. Idhellam paathu sirikkardha azhardhannu therila.

Seri ellathayum vidunga. Ivan eppadiyo poittu poraan. 1190 mark eduthaan 12th la. Engineering padichachu, Velaikku poyachu, America vandhaachu, Kalyaanam Panniyachu, Kozhandhayum pethukkittachu. Apparam enna ? Pondattikku tamil aarvam konjaamavathu iruntha okay. Illa avalum “Bonjour” thaan na, porandha kozhandha gadhi enna aagarthu? Already veli naatla valarra kozhandha. Veliya english thaan pesi valara poguthu. Veetlayum “Sanjay how many times should i tell you to finish your bowl of cereal” nnu solli valatha, Tamil vaadaye irukkaadhu. Bombay heroine maari thaan tamil pesi valarum. Aana amma appa, porandhadhu Kodambakkam, padichadhu PSBB. Tamilnadu product thaan. Leave kku India vandhu “What paatti?, you dont even know how to operate an iPad” nnu sollumbothu paatikku perumaya thaan irukkum. Ullukkulla Tamil pesamaatraanenra varutham nichayam irukkum.

Idhanaala 11th la tamil edukkara ellarum tami aarvathoda valarraanga, sanskrit edukkara ellarum tamizhe theriyaama valaraangannu naan solla varla. Sanskrit eduthu padicha en friends neraya per, innum nalla tamizh pesittu padichittu thaan irukkaanga. Simple a sollapona, adhu namma thaai mozhi nra garvam varanum. Adha pesa theriyatti, padikka theriyaatti asingamnradha unaranum. Perumaya poi “I know how to speak a little tamil. But cant read or write” nnu peter vitta, adhu mallakka paduthu echi thuppara maarinnu unaranum. Naan onnum ellarayum baagam baagama silappadhigaaram, sevagasenthaamani padikka sollala. Andrada tamil a therinjikkonga. Ezhudha theriyaadha? Kathukkonga. Adhukkana muyarchi edunga. Mukkiyama ungalukke theriyatti unga pasangalukku eppadi solli thara mudiyum? Idha yosinga.

Tamizh padichu 185 maark eduthaana. Sandosha padunga. Ner ner themaa, Nirai ner pulimaa, Nirai Nirai Karuvilam, Ner Nirai Kuvilam nnu padikkara kadaisi thalaimurai nammalodadhu aaida koodathu.

 

Categories: tamil, tanglish Tags: , ,

Overheard at the Elevator a.k.a Liftla Ottu Kettadhu

February 5, 2010 11 comments

I have seen many people writing about things they overheard at the elevator . Everytime i used to think these are written just to grab attention and nothing good can be overheard from a elevator. But seriously if there is one interesting place at work , it has to be the elevator . Just a few months into I.T, i have started loving the Elevator travel . It is a place where you can hear about anything and everything . Sports , Politics, Kisu Kisu , Movie Climaxes, Evan Evala sight adikkaaran adhu ithunnu motha ulaga nadappugal ellam therinjikkalaam. But it is not technically overhearing when you do it on a elevator . In that small space whatever you speak , even in your lightest whisper can be heard by others as though they hear it from a Bose Amp .

I have noted one thing about people entering the ‘lift’ . They come in , take a nice look at everybody in it mostly to assess the people inside if the left were to get stuck  . Possible a head count and then either start looking at the fan or read the ‘Instructions to follow incase of emergency’ for the umpteenth time . Idhu oru comedy nna next comedy people speaking in phones inside lifts . Giggling girls talking as soft as they can in the phone, thinking nobody can hear. Not knowing the fact that the boyfriend on the other side is audible too. “Saaptiya” “Illa pa, inikku work irukku” ” Hmmm Apparam” .

One more interesting group of people is a bunch of boys and a girl who get down at different floors. One boy keeps talking nonsense with the girl ignoring his sagaas along side. And antha ponnu erangi lift edutha odane avan friends avana paathu vidra look irukke . Appappa.  Other set of people are the self smilers. Get in Lift -> Take Mobile Phone -> Check Message -> Smile.

Finally the languages that you hear in a lift . Tamil , Telugu , Kannada, Hindi , Economic Times English, I am one grade higher than you English, Boy Girl English , Girl Girl english and most important TANGLISH

“Indian English is a recognized form of English”  said one of my soft skills faculty in a training session . I thought she was exaggerating the fact . But Wiki has a biiig article on Indian English . Eventhough Indian English has attained global popularity i must say Tamilian English has a class of its own. Ippo edhukku idha solrennu paakkareengala .  Wait, I “Overheard” a conv at the elevator today .

Girl: You are coming to the canteen no ?

Boy :Illa Illa. my Lead you know no . Athaan, Hema Parthasarathy . Semma strictu . 5 mins i come late , she makes me sit half hour extra in evening.

Girl: Oh, actually my lead was like that only . Now she is not like that . What to say…Kind of lenient .

Boy: Really? Lucky Yaar. You are staying in OMR only ?

Girl: Ya Ya. Behind that Varasakthi Vinaayagar temple.

Boy: Oh okay . My floor came . Well meet in the evening Okaya?

Lifts can be places of potential information exchange and fun . So next time you go in a lift , don’t forget to overhear 😀

Poli – [Insert some highly clichéd line here as tagline]

January 31, 2010 2 comments

Disclaimer: The characters in this post are all brain childs of the author and they bearing any similarity to real life characters maybe a an intentional coincidence. The post in mostly in tamil, so konjam konjam tamil therinjavangelukkellam konjan kashtam.

Poli actually may mean either fake or the sweet which looks like adai and is sold in Venkateswara Poli stalls across chennai . Title of the blog post in itself is a sledai . Note this word , it comes in the post again .

The story revolves around three people in all. The Hero , The Director and The Producer . Some other characters may come and go in the middle . But , not important .

Scene 1 : Producer’s House . 6:15 pm . Date not revealed.

Producer: Empa hero unakkagave oru script ready panni , nee thaan nadikkanumnu naaya peya alanjikittu irukkan namma directoru.

Hero: Enna vechu padam edukkara alavukku nambikkaya?  yaar sir adhu ?

Producer: Athaan pa , avan modhal rendu padatha unnavechu thunichala eduthaane .

Hero: Ohhh . Sir a .

[Director entering hurriedly]

Producer: Vaayya , directoru. Unga hero vandhirukkan , un scripta konjam sollu .

Director: Hero Saarr . Kadhaya mattum kelunga . Ungalo oho nnu uyartha pora padam sir ithu .

[Director narrating script to hero]

Hero: Hmmm kadha nalla thaan irukku . Padhala costume department yaara poda poreenga ?

Director: Athellam ivlo seekaram epdi saar mudivu panrathu ?

Hero: Yaara pottalum seri . Intha costly cooling class oru 7-8 vaangi vekka sollunga . Pona padathula use panna meethiye irukkum. Athayum sethu use pannikkalaam .

Director: Okay saar.

Hero: Apparam coat suit ellam pottu kurukka murukka nadandhu vandhu maadila irunthu paakara maari oru 4-5 scene vechuppom . Enakkaga illa , audiencekku pudikkum ya athaan solren .

Producer: [Vaaikullaye] “ Yen da solla maatta , kaasu podrathu naanilaa ” . Okay Okay . Neenga sonna seriyaathan irukkum .

Hero: Apparam producer sir , neenga padathula nadikkalaya ? Naan unga kooda kadaisiya nadicha padathula ungalukku semma per vaangi kuduthenla ?

Producer : Aamam Aamam . Atha yaaruppa marukka mudiyum. Athaan youtube, facebook ellam en manatha vangitaye . Naanu , next padam nadikkaren pa unkooda . Ithu venaam .

Hero: Mmmm , Seri . Enakkenna . Mukkiyamaana Vishayam . Padathoda peru enna vekkarthu ?

Director: Sir , intha kadha 5 varushathukku munnadi naane sondhama ezhudhinathu . Original Script sir . So adhukke……

Hero: Stop Stop Stop . Enna sonnenga ? Original Script . Hmmm ‘Original Sin’ maari semmaya irukke peru , athaye vechiduvom .

Producer: Oh besha vekkalaame . Apparam Englishla per vechadhukku extra kaasu ungappana tharuvaan. Vattikellam Kadan vaangi edukkara padam da . Sothappidatheenga .

Hero : Vatti . Vari . Kishthi . Intha maari en vekkka koodathu .

[Director now says the magical film title]

Hero: Wow . Semma Title sir . ‘Original’ layum , Kadan Vaanginathayum sethu oru Sledai ya title vechirukkenga sir . Super .

Director: Directa title a vechida mudiyaathu . Enakku therinja ‘Vathikuchi Varadhachalam’ nnu oru Josiyar irukkaru . Avarkitta intha title okayvannu kekkanum.

Scene 2 : Vathikuchi Varadhachalam’s Ashram. 10: 25 am .

Match Stick: Ennayya pudhu padama ?

Director: Aamanga aiyya . Intha peru okayva paarunga .

Match Stick: Hmmm intha perla pizhay irukku . Sani Seventh Veetla Saplam kaal pottuttu Sitting . So title a konjam thookkala veinga.

Director : Thookalanna ?

Match Stick: Modhal Ezhuthu Nedillll . Azhuthaam .

Director : Yov . Tamizhla arthame maari poidumya . Oruthanukkum puriyave puriyaathu .

Match Stick : Arivilla unakku , Arivilla . Solratha muzhusa kelu . Englishla nedil aakidunga . Tamilla appadiye vechikkalam . Jenangalukkum conpessan varathu .

Director: Adadada. Dei hero , paathiya nammaala . Peru maathanadhunaala paaru . Mavane padam pichikittu oda poguthu .

Scene 3 : Hero’s house . Time not important .

[Apparently shooting and all is over . Some trouble with the release date]

Producer: Padam release aaguma aagatha . Ore kelvi .

Director : Saar , adha enna avlo easy a kettuteenga . Date mudivu panrathu evlo kashtam theriyumla .

Producer : Yov , paatellam release panniyachu ya , padatha seekaram vitta thaane .

Director: Aamam paatu periya paattu . Ooru kaari thuppudhu.

Hero: Neellam directora da . Neeye padatha pathi thappu thappa pesura.

Director: Varra vaaram panlaamnu paatha Rendu Periya Comedy padam release aaguthu , namma panna potta kaasa kooda edukka mudiyathu .

Producer: Ayyayyo venave venam .

Director: Seri rendu vaaram kazhichu panlaamna , saniyan ennoda periya director oruthan romance padamllam eduthu udraan .

Producer: Ayyayo ponnunga kootamellam anga thaan pogum . Patellam vera nalla irukku. Namma pada paatta kelu . Karumam. Yaarya andha music director a recommend pannathu . Cha . Seri Athuvum venaam .

Hero: Idea ! Naama yen renduthukku naduvula release panna koodathu . Oru vaaramavathu light a vasool varumla .

Director: Apparam namma pambi pambi release panromnu intha oor nammala kaari thuppadhu ?

Hero : Athuva mukkiyam . Release panrom . Panniye aagarom.

And thus the trio decided a date and had big plans of box office opening and all. Lesser they know what was going to happen to the movie after release . Well see that part of the conversation later .

Dubbing Sema ‘Dub’bing

December 15, 2009 13 comments

Before i start the post, i would like the make the title clear as it may look stupid to most. Dub has multiple meanings . Two of them being

1.Dub – English for ‘the process of recording or replacing voices for a motion picture’

2. Dabbu – Telugu i suppose – Money .

So by now we all have the basic idea that the post is about ‘dubbing’ minting money . Nice .

English movies dubbed in Tamil have entertained me ever since i saw one particular movie . Kung Fu Hustle (Mirattal Adi) . After that many many movies have came out dubbed in Tamil . Everyone has to thank Vijay TV too , for making Jackie Chan and Samo Hung speak Tamil .

The first and foremost component of a dubbed movie is the name . I really dunno who is the authority in naming these films . But whoever be it , they do a pretty ‘good’ job . The first thing i wait for when a big English movie releases is to see how it is christened in Tamil . Over the years i have noticed many such funny names . To name a few…

1. 2012 – Rudhram . Actually who would translate a movie which is named 2012 . It’s a number for God’s sake.

2. Twilight Saga: The New Moon – Thigilan : Edharkum Thunindhavan . As i had already tweeted i expected the name of this movie to be Onaimanithanum Rathakaateriyum . But looking at the new name , WOW . Aegan , Ayan nra varisaila oru nalla peru miss aiduche .

3. Crouching Tiger, Hidden Dragon – Paayum Puli Padhungum Naagam . No blaming here . Dragons aren’t Tamil Animals . Do we have a tamil name for Oranges or Apples ?

4. D Wars – Rudranaagam

5. Harry Potter and the Goblet of Fire – Harry Potterum Maaya Thee Koppayum

6. Order of the Phoenix – Phoenixin Kattalai . Remember ‘Order’ literally translates to Kattalai in Tamil.

7. Kung Fu Hustle – Mirattal Adi . Its such a huge hit here that many of them know the Tamil name only .

8. 300 – Munnooru Paruthi Veerargal . No comments.

9. I am Legend – Naran . Name most probably chosen as ‘ Naan oru Kaaviyam‘ sounds lame and a lot like ‘ Naan oru Muttalunga’ .

10. Shoot ’em Up – American Pokkiri . Endha alavukku Pokkiri hit aairuntha intha pera choose panni iruppanga . Yosinga Ajith anbargale , Yosinga .

11. Ukkiran – Fast and the Furious . Tamil titlekkum English title kkum edhaavathu oru sambantham irukka ? I think this was also influenced a lot by the ilayathalapathy guest starrer Sukkiran . 😀

12. Aandhai Manidhan – Chronicles of Riddick

Marma Manidhan – V for Vendetta

Kallarai Manidhan – Van Helsing

Pachai Manidhan – The Incredible Hulk

I strongly believe that all these names were kept by 5th  Std studying sons of the People in the Translation Committee as no one would have had a clue about the Literal Translation of the Names 😀

13. Sooravali – Tomb Rider .

(if !( (Literal_Translation) || (Derived_Translations))

then (Keep a Fierce name which indicates the prowess of the hero/heroine)

English movies dubbed in Tamil are always fun . Not only fun , but they fetch big bucks too . ‘The Hindu’ once had an article stating Van Helsing was flop but not Kallarai Manithan ! . Hell , Van Helsing’s IMDB page has the tamil name along .

Here’s one of the top takkar tamil dubbings of all time

What about Tamil movies in English ? We’ll i am not gonna say about it . Watch and Learn .


Kanye Internet Meme – Tamil Style

September 17, 2009 9 comments

Kanye West’s heroic Stunt at the MTV Video Music Awards created a revolution in the net for the past couple of days . It’s so popular that it is an Internet Meme now . There are hundreds of thousands of Kanye Memes flying around the web . These are the most popular ones .[Click to Enlarge]

Seeing all this, i thought of making some Kanye Memes Tamil Style . Here they are . [Click image to enlarge]